Wednesday, 7 March 2018

நினைவுச் சுழி

நினைவுச் சுழி
மேலைப் புலத்திடையே
அதிகாலைக் குளிரிடையே
சாலை வழியிடையே
நீள நடக்கிறேன் நான் -உன்
நினைவுச் சுழியிடையே

ஒவ்வொரு நாளும்
என் கைகள் பற்றி
அழைத்துச் செல்கிறாய்
அச்சமில்லா பொழுதுகளை
எனக்கு தருகிறாய்

No comments: