Wednesday, 7 March 2018

ஓவியமாகி உயிராய் நின்றவள்

ஓவியமாகி உயிராய் நின்றவள்
தேவதையொன்று
தேரிலேறி
பூவாய் மலர்ந்து
பூமிக்கு வந்தது

கவியம் ஒன்று
மண்ணில் உதித்து
காலம் முழுவதும்
கவிதையானது
நீலம் படர்ந்த
வானமெங்கும்
ஓவியமாகி
உயிராய் நின்றது
ஆயிரம் யுகங்கள்
கடந்து சென்றாலும்
அவளின் நினைவால்
நீளும் உலகு

No comments: