1.'நம்ப மறுக்கிறது
மனசு !ஆனலும் அது நடந்து முடிந்து விட்டது .ஏஞ்சல் என அழைத்ததால் தேவதைகள் வந்து தேரில்
அழைத்து சென்றனரோ?மிகப் பெரிய சந்தோசத்தின் முற்றுப் புள்ளி நீ......எல்லாம் ஒரு கனவு
போல இருக்கிறது.....'' மோகனதாசன். '
2.''தேவதையாகி திரிந்த நாட்களெல்லாம்...ஆவாரம் பூப்போல அத்தனையும்
சொரிந்ததுவே!.......பூவே உன் பூவிதழும் பொன் போன்ற பாதங்களும் சாவாது என்றும் தரணியிலே
நிக்குமடி'' சேனையூர் இரத்தினா.
3.''Darkness prevailed on 26th December 2004. The sea
raged over our lands totally uninvited .Many Lives were taken including our
treasured Angel's. Many say many things ,but I wont weep with no good
byes..........Seeni mama Herman
4.''சும்மாதான் சொன்னன் உன் அம்மாவிடம் என்னுடய பிறந்த நாள்
அன்றே பெறு என்று,ஆனால் என் பிறந்த நாளில் ஏப்ரல் 17 நீ.....பிறந்தாய்..பெரியம்மாவில்
அவ்வளவு அன்பா உனக்கு.நாம் இருவரும்தான் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது Same
to you என்றோ Wish you the same என்றோ சொல்லிக் கொள்வோம் இதில் நாமிருவரும் பெருமைப்
பட்டுக் கொள்வோம்.........இனிமேல் அப்படி யார் என்னை வாழ்த்தப் போகிறார்கள்.'' பெரியம்மா
சுசிலா ரிச்சட்
5.''There are so many loving mrmories of you engraved in
my heart ,Which I will treasure and carry it with me forever and ever.I miss
you Angel .My little Angel Who was an inspiration to us all ?But I am conforted
to know that you are often with me in my thoughts'' With love Chitha Rajini
laxman
6.''தூக்கம் மறந்துவிட்ட இரவுகள் ,புன்னகை இழந்து விட்ட முகங்கள்,மெளனமாகிவிட்ட
உனது வீடு.....உனக்கு மெழுகு திரி கொளுத்தும் அந்த கணங்கள்....நீ...இல்லை என்பதை
உணர்கிறேன்.26ம்திகதி இந்த நாளை மறக்கத்தான் நினைக்கிறேன்.முடியவில்லை...உன்னை
நினைக்கும் போது அதுவும்,விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது..என் செல்ல மருமகளே!உன்னை எழுத்தில்
அடக்குவது எப்படி?...கயல்விழி.விஜயன்
''ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்தே!முன் செய்தடவத்தால் வந்த
சுடரொளியே! புரியவில்லை எனக்கு நீ புதிராகிப் போன பயணம்.தேவதையே!..தேவதையின் கிறுக்கல்கள்
படிக்க படிக்க பக்கங்கள் போதாது.பார்க்க பார்க்க நாட்கள் போதாது'' சாந்தி கண்ணன்
7.''அப்பம்மா என நீ அழைக்க்கும் குரல் எப்போதும் எனக்குள் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது.அப்பப்பா உன் மீது உயிரையே வைத்திருந்தார்....நீ எது கேட்டாலும்
மறுக்காமல் செய்வார் கிறிஸ்மஸ் வந்து விட்டால் நீயும் அப்பப்பாவும் சேர்ந்து கிறிஸ்மஸ்
மரம் வெட்டி வந்து சோடிப்பதும் அழகுபடுத்துவதும்.....அந்த நாள் ஞாபகங்களாகி விட்டன...இபோது
நீ....என்கிருக்கிறாய்.....ஏக்கத்துடன் நாங்களெல்லாம்''அப்பம்மா
8.''மார்கழி மாதத்தில் அடிக்கடி என்னோடு ரெலிபோனில் கதைத்தாய்
போய்விடுவேன் என்று சொல்ல துடித்தாயோ தெரியவில்லை.உன் பிறப்பு 1990 வன்செயல் காலத்தில்
சத்தமில்லாமல் வந்ததால்தான் இறப்புக்கு இந்த நாளை தேர்ந்தெடுத்தாயோ?உலகம் முழுவதும்
நினைவு கூர சுடர் ஏற்றி கொடிபோட்டு வருடம்தோறும் கொண்டாட நினைத்தாய் போலும்"
...........................................................................மணிஅம்மா,மணிஅப்பா,ஜூட்மாமா
"
9.''பயமில்லாமல் தீமைக்கு எதிர்த்து நிற்பாய்..நீதிக்காக வாதிடுவாய்,அறிவிலிகளுக்கு
புத்தி சொல்வாய்,பிழையயை கண்டித்து உணர்த்துவாய்.எதிலும் தோற்றுப்போக உனக்கு விருப்பமில்லை....எதையும்
மூடி மறைக்காமல் அம்மாவிடத்தில் வெளிப்படுத்தும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு,அடக்கத்தோடு
கூடிய அலங்காரம்,நாணத்தொடு கூடிய உபசரிப்பு, தனக்குள்ளதையும் பகிர்ந்து கொள்ளும் சுபாவம்
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..உன் ..அருங் குணங்களை...என் அன்பான ஏஞ்சல் நீ என்னோடு
உறங்கும் இடம் வெற்றிட்டமாகிக் கிடக்கிறது''.. உன் அன்பு Grandma
10."நான்தான் அழகானவள் ,நான்தான் பெரியவள் என ஒரு போதும்
நீ..நினைத்ததில்லைஉனக்காக ஒன்றையும் சேர்த்து வைக்கிறதுமில்லை.உதவி செய்வதற்கு முன்னிற்பதற்க்கு
உன்னை மிஞ்ச யாருமில்லை.எல்லோரையும் நேசிப்பாயே...எதற்கெடுத்தாலும் ஒரு சின்ன சிரிப்பு...இவையெல்லாவற்றையும்
உன்னோடு எடுத்து சென்று விட்டாயே"..........வசந்தன் அண்ணா
11."வயதில் இளையவளாக இருந்தாலும் சிறியவர்களுக்கு சிறியவளாகவும்
,பெரியவர்களுக்கு பெரியவளாகவும்,அவர்களுக்கேற்ற பக்குவத்துடனும் பழகத் தெரிந்தவள்தான்
எங்கள் ஏஞ்சல்.பதினன்கு வயதினுள் இவள் சம்பாதித்த மக்கள் கூட்டமோ ஏராளம்.அனைவரையும்
அவரவர் சிந்தனைப்படியே கவரத் தெரிந்தவள்.அழகுத் தேவதையாய் எம்முன் உலா வந்த எங்கள்
ஏஞ்சல் இன்று எங்கள் மனதிலும் கனவிலும் உலா வருகிறாள்." ........ பாவனி,குமரன்
12.'பழகுவதில் தோழியாய்,பாசத்தில் தங்கையாய்,பண்பில் ஒரு மங்கையாய்,அழகில்
ஒரு தேவதையாய்,அறிவுரையில் ஆசானாய்,அனாமியே இருந்தாயே!அத்தனையும் நினைக்க வைத்து சென்றாயே.".............கஸ்தூரி
13.''Why did she have to go? I don't think she'll
know.Her head is bent too low,Oho ,woe is me oh ,woe! She was very clever
,Nobody can forget her ,never, I don't think I'll ever, Now she's under
cover.........Hannah
14."தனக்கென்று இல்லாவிட்டாலும் தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு
கொடுத்து ,ரீச்சரிடம்அடி வாங்கிய நிகழ்வுகளால்,தருமத்துக்கும் தேவதையாகி விட்டாள் என்
அனாமி.வகுப்பு பார்ட்டி என்றாலும் ஆசிரியர் தினம் என்றாலும்முதல் நாளே வந்து ,வகுப்பறையயை
அழகாக அலங்கரித்தும் விதம் விதமான உணவு வகைகளை செய்து வந்தும்,அசிரியர்களையும் எம்மையும்
ருசிக்க செய்து கெட்டிக்காரி ,நல்ல பிள்ளை என பெயர் வாங்குவதில் கில்லாடி.பிரபலமான
ஓவியரான ரவி வர்மாவையே மிஞ்சும் அளவிற்கு என் அனாமி வரைகின்ற ஓவியங்கள் ,வார்த்தைகளில்
வர்ணிக்க முடியாதவை.ஆடல் பாடல்,சித்திரம்,கூத்து,அழகுக் கலை,சமயற்கலை அத்தனை கலைகளும்
அத்துப்படி என் அனாமிக்கு." நண்பி ஆன் ரூபினி
15.என் இனிய தேவதை அனாவிற்கு!...நீ..எங்கிருக்கிறாய் ?தெரியாமல்
நான் தவிக்கிறேன் உன் அப்பா அம்மாஉறவினர்கள் நண்பர்கள்,எல்லோரையும் ஏன்? தவிக்கவிட்டு
சென்றுவிட்டாய்.?உன்னுடன் கழித்த நாட்கள் மறக்க முடியாதவை...நினைவுகளில் என்றும் நீ....உன்னுடன்
பழகிய ஒன்பது வருடங்கள்..ஒன்பது யுகங்களின் நட்பு நம்மிடம்.அடுத்த பிறப்பிலும் உனது
உயிர் நண்பியாக இருக்க ஆசைப் படுகிறேன். உன் அன்பு நண்பி துவாரகா
16.'மட்டக்களபு என்றால் ஏஞ்சல் ஏஞ்சல் என்றால் மட்டக்களப்பு,என்ற
நிலமையே எங்கள் குடும்பத்தில் இருந்தது.டனி,டோரா கிச்சியுடன் அவள் விளையாட..சண்டை பிடிக்க....சமாதானமாக..அவளுக்கிருந்த
சுயாதீனம் அவளுக்கென்றே ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்தது.பெரியவர்களைப்போல் பேசும்
அவள் ஞானம்,எல்லோர் மனதையும் கவர்ந்த விடயம்.தன்னை சூழ இருந்த எல்லோரையும்தன் வசப்படுத்தியிருந்தாள்
அவள்.அவளில்லா உலகம் வெறுமையாகி விட்டது''.............பெரியமாமா
17.ஆழிக் கடல் அலையே,........அழகுத் தேவதையயை அடித்து கொன்றது
ஏன்? .... நீலக் கடல் அலையே,நீ...வந்து உயிர் குடித்தாய்,கோல மயில் அழகி எங்கள் குலக்
கொழுந்தை,ஏன் பறித்தாய்?..சோலைக் கிளி அழகி எங்கள் சுந்தரியயை ஏன் பறித்தாய்? கலா பூசணம்
.வில்லுப் பாட்டு வீரசிங்கம்
18.''எந்த டிசம்பர்
திர மரலகள்
மரணமுமாய் வந்து
எந்த டிசம்பர்
திர மரலகள்
எனது கிராமம்
எனது வீடு
எநது நண்பனின்
ஏஞ்சல்
எனது கனவுகள்
கலைந்த நாள்
எந்த டிசமபர்
திரமலைகள்''
ராமச்சந்திர முகேரி கேரளா
19."அவளிடம் இயல்பாக இருந்த ஆற்றல்கள்,ஆர்வங்கள் அவற்றுக்கான
தூண்டுதல்கள்,அவளது குடும்ப சூழ்நிலை எல்லாமாக சேர்த்து அவளை ஒரு வித்தியாசமான, தற்புதுமையான
பெண்ணாக உருவாக்கிக் கொண்டிருந்தன.ஏஞ்சலை இரண்டு வயது குழந்தையாக முதன் முதல் கண்டதிலிருந்துஅவளது
பதினான்கு வயது வரையான உருவாக்கத்தைஅருகிருந்தே கண்டேன்'' சித்திரலேகா மொளனகுரு.
20.""காணும் மலர்களிலெல்லாம் உந்தன் வதனம் தெரியுதடி.கேட்கும்
இசையிலெல்லாம் உந்தன் இசையின் நாதம் கேட்குதடி.வீசும் தென்றலில் எல்லாம் உந்தன் சுவாசம்
பரவுதடி,காணும் ஓவியங்கள் எல்லாம் உன் கை வண்ணம் ஆனதடி" சித்தப்பா சந்திரகுமார்
21.''குறுக்கு சந்தியால் முட்டி மோதி உன் வீடு வந்தடைந்தபோது....எல்லாம்
முடிந்து போயிற்று. உன் அப்பா.........என்னை கட்டியணைத்து கதறி அழ,உன் அம்மா......மூலையில்
நாலைந்து பேர் சூழ ........உன்.........நினைவுகளை ......மீட்டாள்.அது...ஒரு பொய்யான
நாளாய் ..மாறாதா..?" கவிஞர் த.மலர்ச்செல்வன்
22.எந்தச் சமாதானமும் , எங்களுக்கு ஏற்றதல்ல, ..எங்கள் இதயமெல்லாம்
ஏஞ்சல் இருக்கிறாள், அனாமிகா தெரிகிறாள்,........காலம் கரைந்திடினும்...எம்.....காலம்
முடிந்திடினும்........கோல நிலவை...எம்......குலக் கொழுந்தை எங்கள் கண்ணிமைக்குள்
,...பூட்டி வைப்போம் ! பொக்கிசம் போல் காத்திடுவோம்.....திரு.கு.நாகேஸ்வரன்..
23."மழை மகிழ்ச்சியின் வெள்ளம் என்பாய்,மழையின் மீது உனக்கொரு
தீராத காதலா?மழை மகளா நீ?மழையைக்கண்டதும் உன்க்குள் ஒரு கலாபம் களி கொள்கிறதா?குடைக்குப்
பதிலாக குதுகலத் தோகை விரித்தபடி மழையில் நனைந்தபடி வருவாயாமே?மழையின் கூந்தலிடை பளிச்சிடும்
வெண் முத்துக்கள் ஒளித்தாற் போன்ற உன் புன்னகையயை வரவேற்க ,மழை கழுவிய மல்லிகை அரும்புகள்
காத்திருக்கும்...அது மார்கழி மாதத்தின் வெண்பனி அரும்புகள்.''முத்தென்ன வெண் நகையாய்
முன் வந்தெதிர்ந்தெழுந்து தித்திக்கப் பேசுவாய்"' கவிஞர் சு.வில்வரெத்தினம்
24.'எங்களுக்கும் ,எங்கள் அணமிக்காவுக்கும் ,,இரசிப்பதற்காய்
இருந்த தாமரைக் குளம் எங்கள் கண்களிலே வற்றி விட்டது.........கர்வம் ஏற்றிக்க் கொள்ள
இருந்த காண்ணகி கோயில் ..எங்கள் மனங்களில் கட்டுடைந்து போய் விட்டது.தாரளமாய் குவிந்திருந்த
மணற் பரப்பு , தரம் கெட்டு போய் விட்டது.ஊரைச் சுற்றியும் எங்கள் வீடுகளை சுற்றியும்
அழகு சேர்த்த முகத்துவாரங்கள் முகமிழந்து போய்விட்டன. அதோ.....................................அந்த
அலைகள் அழகி அனாமிகாவை அணைத்துக் கொண்டபின் சுனாமிகளானது எப்படி....'' பேராசிரியர்,கே.ஏ.குணசேகரன்
25.""26ஆம் திகதி சுனாமி எழுந்தது 24ஆம் திகதி காலை
நாம் அனைவரும் கொழும்பிலிருந்து வானில் புறப்பட்டோம் 8 மணி நேரம் உனக்கருகில் இருந்தவாறு
பயணம் செய்தேன்.எத்தனை பகிடிகள் ,எத்தனை கதைகள் ,சிரிப்பும் கும்மாளமுமாய் பயணம் கழிந்தது.நீ...என்னை
விட்டு பிரியப்போகிறாய் என்பதால்தானா அந்த நாளில் அதிக நேரம் உன்னோடிருந்தேனோ?வாழ்வின்
சில நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கூற முடியாது.சில முடிச்சுகளை அவிழ்க்கவும் முடியாது.வாழ்வின்
புதிர்கள் அவை.அம்மாவும் அப்பாவும் உன் நினைவில் வாழ்கிறார்கள்.'' பேராசிரியர் சி.மொளனகுரு
26LIKE A LOVELY PRINCESS...... '' We could still feel
your little fingers touching all of us caressing us.Yet
,your steadfast silence breaks our hearts it shakes us to the core .Is it your
way of testing us to know who doesn't have any love fore you?Cane there be
anyone like that?Are you conducting the test on me who have always heeded to
your innocent words as if they were the very gospel ?.......Banu
27.''என் அன்பான செல்ல மகள்.............................................நீ
எப்படி இருக்கிறாய்.உன் இருப்பு பற்றி அறிய ஆவலாய் இருக்கிறேன்.எங்களை விட்டு பிரிந்து
நீ...நீண்ட பயணம் போய் பன்னிரண்டு வருடங்கள் கடந்தாயிற்று....உன்னிடம் சொல்ல எவ்வளவோ
இருக்கிறது மகளே.நீ...வளர்ந்து வருகிற நாட்களில் எனக்கு மகளாக இருந்த்ததை விட ,நல்ல
சினேகிதியாய் இருந்தாய்.நான் எல்லாவற்றையும் உன்னிடம் சொல்வேன்.பெரிய மனுசி போல ஆலோசனைகள்
சொல்வாய்.இபோது நடக்கும் எல்லாவற்றையும்,உன்னிடம் மானசீகமாக சொல்கிறேன்.காற்றில் கலந்துவரும்
என் பெரு மூச்சொலிக்குள் மிதந்து வரும் என் மனதை படிக்கும் ஆற்றல் உனக்கிருக்கும் என்றே
நம்புகிறேன்'' என்றும் உன் நினைவுகளுடன்..பிரமிளா சுகுமார்
No comments:
Post a Comment