உன் கனவுச் சுமை
கார்த்திகை முழு நிலவு என் வாசல் வரை வந்து உன் நினைவை என்னுள் நீளச் சொல்கிறது
கார்த்திகை விளக்கீடு நம் வீதியெங்கும் வென்ணிலவுக்கு முகம் காட்டும் நேரம்
நாம் நம் வீட்டுப் படிகளில் உட்காந்து கதைகள் பல பேசி களித்த நாட்கள்
என் மடி கனக்கிறது உன் கனவுச் சுமை தேடி