Wednesday, 7 March 2018

உன் கனவுச் சுமை

உன் கனவுச் சுமை
கார்த்திகை முழு நிலவு
என் வாசல் வரை வந்து
உன் நினைவை
என்னுள் நீளச் சொல்கிறது

கார்த்திகை விளக்கீடு
நம் வீதியெங்கும்
வென்ணிலவுக்கு முகம் காட்டும் நேரம்
நாம் நம் வீட்டுப் படிகளில்
உட்காந்து கதைகள்
பல பேசி களித்த நாட்கள்
என்
மடி கனக்கிறது
உன் கனவுச் சுமை தேடி

No comments: