அனாமிகாஞ்சலி நினைவுப் பேருரையும் கோபி ரமணணின் ஓவியக் கண்காட்சியும்
===================
அனாமிகாஞ்சலி நினைவுப் பேருரை தொடரின் நான்காவது பேருரையும் ஓவியர் கோபி ரமணணின் ஓவியக் கண்காட்சியும் எதிர்வரும் 26-12-2017 செவ்வாய்க் கிழமை மாலை 3.00 மணிக்கு மட்/ பொது நூலக கேட்போர் கூடத்தில் முன்னாள் மட்/ மாநகர ஆணையாளர் திரு. சரவணமுத்து நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மகுடம் ஆசிரியர் திரு. வி.மைக்கல் கொலின் அவர்களின் வரவேற்புரையுடன்
ஆரம்பிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க காப்பாளர் கலாபூஷணம் செ.
எதிர்மன்ன சிங்கம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
"ஈழத்துக் கூத்துப் பனுவல்களின் இலக்கியச் செழுமை" என்ற தலைப்பில்
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர் திரு. க. மோகனதாசன் பேருரை ஆற்ற
பேராசிரியர் செ. யோகராசா நூல் அறிமுகத்தையும் ஓவியங்கள் தொடர்பான அறிமுகத்தை சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினமும் ஆற்றவுள்ளனர்.
திரு.பால சந்திரகுமார் இசையஞ்சலி நடத்த செல்வி அம்ரிதா விஜயன் நன்றியுரை ஆற்றுவார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Comments
Rakuthas Shanmukanathan தகவலுக்கு நன்றிகள்

No comments:
Post a Comment