Thursday, 12 June 2008

சின்னதேவதை

மழை

மழை மகிழ்ச்சியின் வெள்ளம்
மழயில் நனைய ஆசை
மழை பெய்யும் பொழுது
எங்கள் வீட்டு விறாந்தையில்
இருந்து கொண்டு
மழையை ரசித்துக்கொண்டு
கிட்டார் வாசிக்க ஆசை.

எல்லாம் எப்படி

உயிரினங்கள் எவ்வாறு
தம் செயல் மாறாது
செயல்படுகின்றன?
ஞாபக சக்தியென்றால் என்ன?
எம்மால் இவ்வாறு
யோசித்து எழுத முடிகிறது?
எப்படி?எப்படி?எப்படி?
கதைப்பது எப்படி?
நடப்பது எப்படி?
அசைவது எப்படி?
மூளையென்றால் என்ன?

Saturday, 16 February 2008

இறப்பும் பிறப்பும்

எவ்வாறு இறப்போம்?
பிறந்த ஞாபகம் ஏன்
நிலைப்பதில்லை?
பிறகு நடப்பது
ஏன்?
உணரப்படுவதில்லை?
பேய் பிசாசு இவைகள்
இருந்தால்
நாம் உயிர் வாழலாமா?

பூமியும் காற்றும்

காற்று என்றால் என்ன?
பூமியின் பிடி என்றால் என்ன?
பூமியின் மையப் பொருள் என்ன?

பிரபஞ்சம்

பிரபஞ்சமென்றால் என்ன?
இப்பிரபஞ்சம்
எப்படி உருவானது?
நேரம் காலம்
சூரியன் சந்திரன்
கிரகங்கள் எரிகல்
எப்படி உருவானது?
இதற்கெல்லம் மூலப்பொருள் என்ன?
அந்த மூலப்பொருள்
எங்கிருந்து வந்தது?
ஏன் வந்தது?

அனாமிகா கவிதைகள்

வாழ்க்கை
வாழ்க்கை
என்ன இது?
இதற்கு அர்த்தமென்ன ?
பிறக்கு முன் எங்கிருந்தோம்?
இறந்தபின்பு எங்கே போவோம்?
எப்பொழுது இறப்போம்?
மறுபடியும் பிறப்போமா?

அனாமிகா

அனாமிகா
சுனாமியில் கரைந்து போன வண்ணமலர்.இலக்கிய ஆழுமையும் கலை ஆழுமையும் மிக்க ஒரு சின்னஞ்சிறு மலர்.வாழ்க்கை பற்றிய கனவுகளோடு வாழ்ந்தவள்.வாழ்க்கை பற்றிய கேள்விகளோடும் வாழ்ந்தவள்.மட்டக்கிளப்பு வட மோடி கூத்தை முறயாகப் பயின்றவள்.காலம் அவளை கரைத்த போதும் அவள் ந்னைவுகள் என்றும் எம்மோடு.